மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கல்லூரி முதல்வரை தீ வைத்து கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தூரில் உள்ள பிஎம் கல்லூரியில் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா(49), வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிக்கொடிருந்தபோது, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா மதிப்பெண் சான்றிதழ் கேட்டு முதல்வரை வழிமறித்துள்ளார். அப்போது, திடீரென மறைத்துவைத்திருந்த பெட்ரோலை கல்லூரி முதல்வர் மீது ஊற்றி தீ வைத்து கொள்ளுவிட்டு அவர் தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் முதல்வர் மருத்துவமனியில் உயிருக்குப் போராடி வருவதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.