states

img

முன்பு தடுப்பூசிக்கு.. இப்போது செல்பி எடுப்பதற்கு.. பணத்திலேயே குறியாக இருக்கும் பாஜக அமைச்சர்...

போபால்:
மத்தியப் பிரதேசத்தில் அம்பேத் கர் நகர்-மோவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உஷாதாக்குர். வேடிக்கையாக நடந்து கொள்வதும் விநோதமாக பேசுவதும் இவரதுவாடிக்கை.

அண்மையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் ‘பி.எம். கேர்ஸ்’ நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கொரோனாதடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை. ஒருவழியாக மோடி அரசும் அதற்கு இறங்கி வந்துவிட்டது. ஆனால், உஷா தாக்குர்ரூ. 500 நன்கொடை கொடுக்க வேண்டும் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.இந்நிலையில், தன்னுடன் ‘செல்பி’ எடுக்க விரும்புவோர் பாஜகவுக்கு 100 ரூபாய் நன்கொடை செலுத்தவேண்டும் என்று மற்றுமொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கந்துவா நகரில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் உஷா தாக்குர், “நண்பர்களே, இனியார் செல்பி எடுத்தாலும் 100 ரூபாயைபாஜகவின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும்.

கட்சிப்பணிகளுக்கு இந்தத்தொகை பயன்படுத்தப்படலாம். அதுபோல பூக்களுடன் வரவேற்பதைப் பொறுத்தவரை, லட்சுமி தேவி பூக்களில் வசிக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்ட பகவான்விஷ்ணுவைத் தவிர வேறு யாருக்கும்பூக்களை ஏற்றுக்கொள்ள உரிமை இல்லை. எனவே நான் பூக்களையும் ஏற்க மாட்டேன். பிரதமர் கூட பூக்கள் வேண்டாம், புத்தகம் கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். எனவேபுத்தகங்களை சேகரிக்க முடிந்தால், கட்சி அலுவலகத்தில் ஒரு நூலகத்தைஉருவாக்குவோம்” என்று கூறியுள்ளார்.