states

img

கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் மீட்டர், போலி ரெம்டெசிவிர் விற்பனை... ம.பி.யில் பாஜக தலைவர்கள் 2 பேர் சிக்கினர்...

போபால்:
கள்ளச் சந்தையில் ஆக்சிஜன் மீட்டர்களையும், போலி ரெம்டெசிவிர் ஊசி மருந்தையும் விற்பனை செய்த பாஜக தலைவர் கள் 2 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர் ராஜேஷ் மகேஸ்வர். ராஜேஷ் மகேஸ்வர் மெடிக்கல்ஏஜென்சியின் மேலாளரான இவர், பாஜகவின் முக்கியத் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில், ராஜேஷ் மகேஸ்வர், ஆக்சிஜன் மீட்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாகபோலீசாரால் கைது செய்யப்பட் டுள்ளார்.நோயாளிகளுக்கு எந்தளவிற்கு ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது என்பதை அளவிடுவதற் கான மீட்டர்கள் வெளிச் சந்தையில் 600 முதல் 700 ரூபாய் வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால், தற்போதுள்ள பற்றாக்குறையை சாக்காக வைத்து, இந்த ஆக்சிஜன் மீட்டர்களை தலா 4 ஆயிரம் ரூபாய் என்ற கொள்ளை விலைக்கு மகேஸ்வர் விற்று வந்துள்ளார். இதில் பல லட்சம் ரூபாய்களை அவர் மோசடியாக சம்பாதித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் இதேபோல வாடிக்கையாளர் ஒருவருக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு ஆக்சிஜன் மீட்டர்களை மகேஸ்வர் விற்க முயன்றபோது, போலீசார் அவரைக் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். 607 ஆக்சிஜன் மீட்டர்களையும் பறிமுதல் செய் துள்ளனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு, விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவரான சரப்ஜீத் சிங் மோகாவும் இதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கினார். மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரமருத்துவமனையின் இயக்குநராக இருக்கும் சரப்ஜீத் சிங்,சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டபோலி ரெம்டெசிவிர் மருந்துகளை, மருந்துப்புட்டி ஒன்றுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை அதிக விலை வைத்து, பல கோடி ரூபாயை கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடித்து மாட்டினார்.அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 274, 275, 308 மற்றும்420 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை மோகா கைது செய்யப்படவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.