india

img

கல்யாண் சிங்கிற்கு அஞ்சலி; காங்கிரஸ், சமாஜ்வாதி புறக்கணிப்பு.... பாஜக தலைவர்கள் நேரில் அழைப்பு விடுத்தும் செல்லவில்லை...

லக்னோ:
பாஜகவின் மூத்தத் தலைவரும் ராஜஸ்தான், இமாசலப்பிரதேச மாநிலங்களில் ஆளுநராக இருந்தவருமான கல்யாண் சிங் கடந்த ஆகஸ்ட் 21 அன்று காலமானார். அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள் ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், கல்யாண் சிங்-கிற்கு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் புதனன்று பாஜக சார்பில்அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு, மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் பாஜகவினர் நேரிலேயே சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.குறிப்பாக, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங், அவரது மகனும் தற்போதைய சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் ஆகியோரை பாஜக மாநிலத் தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் நேரில் சென்றுஅழைத்திருந்தார். பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதிக்கும் நேரில்அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் அழைக் கப்பட்டிருந்தனர்.ஆனால், காங்கிரஸ் மற்றும்சமாஜ்வாதி கட்சியினர் முழுமையாககல்யாண் சிங்-கிற்கான அஞ்சலி கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மாயாவதியும், தான் செல்லாமல்,தனது கட்சியின் பொதுச்செயலாளரான சதீஷ் சந்திர மிஸ்ராவை அனுப்பி வைத்துள்ளார். இது பாஜகவினருக்கு அவமானகரமாக அமைந் துள்ளது.அஞ்சலி நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, ஆகஸ்ட் 21- அன்று கல்யாண் சிங் இறந்தபோது, நேரிலும் சமாஜ்வாதி, காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. 

1992-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச முதல்வராக கல்யாண் சிங் இருந்தபோதுதான் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் கல்யாண் சிங் ஆவார். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததற்காக அவருக்கு 1994-இல் ஒருநாள் சிறைத்தண் டனை வழங்கப்பட்டது. இவ்வாறு நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டதன் காரணமாகவே உ.பி. அரசியல் கட்சிகள் பலவும் கல்யாண் சிங் அஞ்சலி நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன.