மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ கேதர்நாத் சுக்லாவிற்கு நெருக்கமானவரும், பா.ஜ.க நிர்வாகியுமான பிரவேஷ் சுக்லா என்பது தெரியவந்தது.
இதை அடுத்து, பிரவேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்தனர். பிரவேஷ் சுக்லா, தேசியப் பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.