போபால்:
மத்தியப் பிரதேச மாநில அரசுஅலுவலகங்களில் இனி கோமியத் தால் தயாரிக்கப்பட்டு பினாயில் மட் டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அங்குள்ள சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுஉத்தரவிட்டுள்ளது.
பசுக்களுக்கு தனி அமைச்சகம், பசுக்களுக்கு சரணாலயம், கோமாதாவைக் காப்பாற்ற தனிவரி, பசுவை புனித மாதாவாக அறிவிப்பது, பசுவின் சிறுநீர்,சாணத்தை பூச்சிக் கொல்லியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்துவது என்று பசுமாடுகளைப் பற்றியே கவலைப்படும் அரசாக, மத்தியப்பிரதேச மாநில பாஜக அரசுஉள்ளது.அந்த வகையில், மாட்டின் சிறுநீரான கோமியம் மூலம்பினாயில் தயாரிக்கும் பணியை அரசு ஊக்குவித்து வரும்ம.பி. பாஜக அரசு, தற்போது கோமியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை மட்டுமே அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பால் வற்றிப்போன பசுக்களை, பராமரிப்பில்லாமல் விடும் நிலை மாறும் என்று கூறியுள்ளது.பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவைப் படும் கோமியத்தை மத்தியப் பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறையே சப்ளை செய்யும் என்றும் கூறியுள்ளது.