போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத் தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்தியப்பிரதேச பாஜக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத் திலுள்ள இந்தூர் விமான நிலையத்தில், பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் உஷா தாக்குர் தனதுஆதரவாளர்களுடன் கொரோனா பூஜை நடத்தியுள்ளார்.தேவி அஹில்யா பாய் ஹோல் கரின் சிலை முன்பு கைகளைத் தட்டி நடத்தப்பட்ட இந்த பூஜையில், விமான நிலைய இயக்குநர்ஆர்யாமா சன்யாஸ் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், கொரோனாவைத் தடுப்பதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த பூஜையின்போது, அமைச்சர், முகக்கவசம் இல்லாமல் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.அமைச்சர் உஷா தாக்குர்,இந்த பூஜையின் போது மட்டுமல்லாமல், பொதுவெளியில் எங்குமே முகக் கவசம் அணிவதில்லை என்பது எதிர்க்கட்சியினரின் நீண்டநாள் குற்றச் சாட்டு ஆகும். மத்தியப்பிரதேச மாநில சட்டமன்றக் கூட்ட அமர்வின் போது, ‘ஏன் முகக்கவசம்அணியவில்லை’ என்று உஷாதாக்குரிடம் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. ‘ஒவ்வொரு நாளும், நான் ஹனுமன் மந்திரத்தை உச்சாடனம் செய்யும்பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் முகக் கவசமெல்லாம் அணிய வேண்டியதில்லை’ என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.அதன்படி, இவ்வளவு நாளும் முகக்கவசம் அணியாமலேயே ஊரை வலம்வந்து கொண்டிருந்த அமைச்சர் உஷாதாக்குர், தற்போது விமான நிலையப் பூஜையிலும் முகக் கவசம் அணியாமலேயே கலந்துகொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.