states

img

ம.பி: அனுமதியின்றி தபால் வாக்குப்பெட்டிகளை திறந்த பாலகாட் மாவட்ட ஆட்சியர்!

மத்தியப் பிரதேசத்தில் பாலகாட் மாவட்ட ஆட்சியர் கிரிஷ், அனுமதியின்றி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, தபால் வாக்குப்பெட்டிகளை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ஆம் தேதி 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மத்தியப் பிரதேசம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், பாலகாட் மாவட்ட ஆட்சியர் கிரிஷ், அனுமதியின்றி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, தபால் வாக்குப்பெட்டிகளை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.