கொச்சி:
கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கட்டுக்கடுங்காத வகையிலான எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிபிசிஎல் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹில் பேலஸுக்கு முன்னால் டிஒய்எப்ஐ ஊழியர்கள் சுமார் 500 பேர் கறுப்புப் பலூன்களை பறக்கவிட்டனர். மோடியின் உருவ பொம்மைக்கும் அவர்கள் தீ வைத்தனர்.
பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை (பிபிசிஎல்) விற்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு பிபிசிஎல் தொழிலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி கொச்சி சுத்திகரிப்பு நிறுவன ஊழியர்கள் மோடி பங்கேற்கும் விழாவை புறக்கணித்ததாக பிபிசிஎல் பாதுகாப்பு போராட்டக் குழுவின் தலைவர் தாமஸ் கன்னடியில் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்.கே. ஜார்ஜ் ஆகியோர் தெரிவித்தனர். இந்த விழாவை பிபிசிஎல் நிறுவனத்தில் உள்ள 170 பிஎம்எஸ் தொழிலாளர்கள் தவிர அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும் புறக்கணித்துள்ளனர்.