states

img

கேரள சுகாதார பல்கலைக்கழக கல்லூரிகள் 43இல் 40ல் இந்திய மாணவர் சங்கம் வரலாற்று வெற்றி...

திருவனந்தபுரம்:
கேரள சுகாதார பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான மாணவர் பேரவைத் தேர்தல்களில் எஸ்எப்ஐ வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 43 கல்லூரிகளில் 40 இல் எஸ்எப்ஐ வென்றது. மாநிலத்தின் 10 அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏழு இடங்களில் எஸ்எப்ஐ சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

எஸ்எம்ஐஇடி நர்சிங் கல்லூரி உடுமா, அரசு மருத்துவக் கல்லூரி கண்ணூர், நர்சிங் கல்லூரி கண்ணூர்,பாரா மருத்துவக் கல்லூரி கண்ணூர்,ஆயுர்வேத கல்லூரி கண்ணூர், ஏ.கே.ஜி நர்சிங் கல்லூரி கண்ணூர், தலசேரி நர்சிங் கல்லூரி, அரசு ஹோமியோபதி கல்லூரி கோழிக்கோடு, அரசு நர்சிங் கல்லூரி கோழிக் கோடு, அரசு மருத்துவக் கல்லூரி மஞ்சேரி, வி.பி.எஸ்.வி ஆயுர்வேத கல்லூரி கோட்டக்கல். இ.எம்.எஸ். நர்சிங் கல்லூரி பெரிந்தல்மண்ணா, வைத்தியராகதம் ஆயுர்வேத கல் லூரி, ஒல்லூர், அரசு மருத்துவக் கல்லூரி, பாலக்காடு, சிமேட் நர்சிங்கல்லூரி, மலம்புழா, அரசு ஆயுர்வேதகல்லூரி திரிபுனிதுரா, பாட்டியார் ஹோமியோபதி கல்லூரி, மருத்துவ அறக்கட்டளை நர்சிங் கல்லூரி எர்ணாகுளம், எஸ்.எம்.இ நர்சிங் கல்லூரி, பத்தனம்திட்டா,
அரசு மருத்துவக் கல்லூரி பாரிப்பள்ளி, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி, கோட்டயம் அரசு மருந்தியல் கல்லூரி, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, பிஃபாம் கல்லூரி, திருவனந்தபுரம் எம்.எல்.டி கல்லூரி, திருவனந்தபுரம் பல் மருத்துவக் கல்லூரி,திருவனந்தபுரம் நர்சிங் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி, நேமம் ஸ்ரீவித்யாதிராஜா ஹோமியோ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மாணவர் பேரவைகளில் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது.எஸ்எப்ஐக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய அனைத்து வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்களை மாநிலத் தலைவர் வி.ஏ.வினீஷ் மற்றும் செயலாளர் கே.எம்.சச்சின்தேவ் ஆகியோர் பாராட்டினர்.