சிறுவர்களுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த பாலோடு பகுதியை சேர்ந்த முதியவரான பிரேம்குமார், சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாச படங்களை காட்டி, அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவன் தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முதியவர் பிரேம்குமார் பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் விசாரணை செய்ததில், முதியவர் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுவர்களுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.