கொச்சி, மார்ச் 31- சில அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக சாதி, மத அடிப்படை யில் மக்களைப் பிரித்து சமூகத்தில் பிளவுகளை உருவாக்குகிறார்கள். பகத்சிங்கின் கொள்கைகளின் பின் னால் மக்கள் செல்வதை அவர்கள் விரும்பவில்லை, ”என்று பகத்சிங்கின் மருமகள் குர்ஜித் கவுர் தத் கூறினார். ஆலப்புழை மாவட்டம் வலியச்சுடு காடு என்ற இடத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், போராளியுமான ஹஸ்ரத் மோகனியின் வாழ்க்கை வர லாறு-‘ஹஸ்ரத் மொஹானி இன்குலா பின்தே இடிமுழக்கம் என்ற புத்தகத்தை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வ தற்காக மருமகள் குர்ஜித் கவுர் தத், மரு மகன் ஹகுமத் சிங் மாலி ஆகியோர் வந்திருந்தனர் அப்போது குர்ஜித் கவுர் தத் கூறி யதாவது: நவீன இந்தியாவில் பரப்பப்படும் தேசபக்திக்கும் தேசியவாதத்திற்கும், சுதந்திரப் போராட்டத்தின் போது பகத் சிங் உருவகப்படுத்திய கருத்துக்களுக் கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைக்கு உள்ளவர்கள் பழைய சூழலிருந்து முற்றிலும் வேறுபட்ட வர்கள். தங்கள் சுயநலத்துக்காக சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிரித்து சமூகத்தில் பிளவுகளை உருவாக்கு கிறார்கள். பகத்சிங்கின் கொள்கை களுக்கு ஆதரவாக மக்கள் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. பகத்சிங் மனிதநேயத்தை மட்டுமே கடவுளாகக் கருதி மக்களுக்குச் சேவை செய்ய விரும்பினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறியுள்ளனர். அதே சமயம் பணக்காரர்கள் மேலும் பணக்கா ரர்களாக மாறியுள்ளனர். பகத்சிங்-கிற்கு மிகவும் பிடித்த முழக்கமான இன்குலாப் ஜிந்தாபாத் பிர பலமடைந்துள்ளது. அந்த முழக்கம் இன்றைக்கும் பொருத்தமானது. இந்த முழக்கம் இல்லாமல் இருந்தால் நாட் டில் ஒரு போராட்டம் கூட நடக்காது. தில்லி விவசாயிகள் போராட்டத் தின் போது ஒவ்வொரும் பகத்சிங்-கின் உருவம் பொறித்த பணியன்களை அணிந்திருந்தனர். ஒவ்வொரு வாக னத்திலும், ஒவ்வொரு கூடாரத்திலும் பகத்சிங்கின் படம் பொறிக்கப்பட்டி ருந்தது. இது இன்குலாப் ஜிந்தாபாத் இன்றும் உத்வேகத்துடன் ஒலிக்கிறது என்பதை நிரூபிப்பதாக இருந்தது. பகத்சிங்கைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அவரது கொள்கை களைப் பின்பற்றவும் இளைஞர்கள் மத்தியில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள் ளது. உண்மையில், 1900-ஆம் ஆண்டு களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பகத்சிங் தலைமையில் விவசாயிகள் ஒன்பது மாதங்கள் போராட்டம் நடத்தி னர். பகத்சிங்-கின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதும் விவசாயிகள் போராட் டத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். தில்லி விவசாயிகளின் போராட்டத் தின் போது சிங்கு எல்லையில் புரட்சி யாளர்கள் பற்றிய புத்தகங்கள் அடங் கிய நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. தினமும் நூற்றுக்கணக்கான விவசாயி கள் நூலகத்திற்கு வந்து படிக்கவும் புதிய விஷயங்களைக் கொள்ளவும் விவசாயிகளுக்கு வாய்ப்பாக இருந் தது. ஒவ்வொரு நாளும் தங்களது போராட்டம் குறித்து மாலை நேரங்க ளில் நூலகங்களுக்கு வருகை தந்து உரையாடினர் என்றார்.