states

img

ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க கேரள அரசு முடிவு!

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் சட்ட மசோதாவுக்கு அம்மாநில அரசின் அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

கேரள பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் தொடர்பாக கேரள அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பிரச்சனை நிலவி வருகிறது. பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 9 பேர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கியிருந்தார். இதை தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் சட்ட மசோதாவுக்கு அம்மாநில அரசின் அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆளுநருக்கு மாற்றாக உயர் கல்வித்துறை நிபுணர்கள் அல்லது அமைச்சரவை உறுப்பினர்களை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமனம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது.