states

img

கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்

கேரளா, செப். 16- கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 24 வயது இளைஞர் நிபா வைரஸ் தொற்றால் பலியானதையடுத்து அந்த பகுதிகளில் தீவிரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
   கடந்த வாரம் கேரள மாநிலம் மல்ப்புரம் மாவட்டத்தில் பெங்களூருவில் கல்லூரியில் படித்து வந்த 24 வயது மாணவர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்தார் அவருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதால் அவரது மாதிரிகள் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் அவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இதனையடுத்து மாணவரின் வீட்டைச் சுற்றியுள்ள 5 வார்டுகள் தீவிர கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு வெளிநபர்கள் செல்லவோ, அங்கிருந்து தேவையில்லாமல் வெளியே செல்வதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பு உட்படப் பல பல கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.
 மாணவரோடு தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாருக்காவது நிபா அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது