திருவனந்தபுரம், செப்.15- பெற்றோர் இறந்ததால் ஆதர வற்ற நிலையில் உள்ள மூன்று குழந்தைகளுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் உதவினார். எர்ணாகுளம் பள்ளிக்கரை ஊத்திக்கரை தொண்டி முலாவைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்புக்காக ஒவ்வொரு குழந் தைக்கும் மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்க மகளிர் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. பெற்றோர் இறந்ததால், ஆதர வற்ற குழந்தைகளை பராமரிக்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநருக்கு, அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தர விட்டார். ஆனால் தாயின் பெற்றோர் குழந்தைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. மலையாளியான மனைவியைக் கொன்றுவிட்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த கணவன் தற்கொலை செய்து கொண்டதால் குழந்தை கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப் பட்டனர். எட்டு, ஐந்து, இரண்டு வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்த செய்தியை அறிந்து அமைச்சர் வீணா ஜார்ஜ் நடவடிக்கை எடுத்தார். குழந்தைக ளின் தாத்தாவை அழைத்து அமைச்சர் ஆறுதல் கூறினார்.