states

img

பாலக்காட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.... முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்....

பாலக்காடு:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்கிற பாலக்காடு மக்களின் கனவு நனவாகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, பொது மருத்துவம், உள்நோயாளிகள் பிரிவுகளை முதல்வர் பினராயி விஜயன் வியாழனன்று திறந்து வைத்தார். இந்த ஆண்டிலேயே அறுவை சிகிச்சை அரங்குகளும், வார்டுகளும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் பற்றாக்குறை காரணமாக, பாலக்காடு மக்கள் சிறப்பு சிகிச்சைக்காக திருச்சூரையும் கோயம்புத்தூரையும் நம்பியிருந்தனர். பாலக்காடு மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவ வசதிகள் கிடைப்பதால், மக்களின் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது என்று முதல்வர் கூறினார்.விழாவிற்கு அமைச்சர் ஏ.கே.பாலன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி, ஷாபி பரம்பில் எம்எல்ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கே பினுமோள் உள்ளிட்டோர் பேசினர்.