திருவனந்தபுரம்:
‘மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றிலிருந்து தடுப்பூசிகளால் மக்களைப் பாதுகாக்க முடியாது என்ற பிரச்சாரம் தவறானது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
‘அனைத்து வகையிலான கொரோனா வைரஸ்களிலிருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ள தடுப் பூசி பயனுள்ளதாகவே இருக்கும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்திருக்கும் பினராயி விஜயன், அதில் மேலும் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றால் ஏற்பட் டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இதுவரை நாம் எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. கேரளத்தில் காணப்படும் மரபணு மாற்றமடைந்த வைரஸ்கள் குறித்து, 1. நோயின் பரவல், 2. உயிரிழப்பு ஆபத்து, 3. தடுப்பூசிகளைத் தாங்கும் திறன் ஆகிய மூன்றுஅம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது. இதில், இந்த மரபணு மாற்றவைரஸ்கள் மிகவும் விரைவாக பரவக் கூடியது என்று கண்டறியப்பட்டு உள்ளது. எனினும், இந்த வைரஸ்கள் இறப்பை அதிகரிக்கின்றனவா? என் றால், நோய் பரவல் அதிகரிப்புக்கு ஏற்ப இறப்பு விகிதமும் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
எனவே, இதிலிருந்து நம்மைப் பாதுகாக்க, முகக் கவசங்களை சரியாகஅணிவது முக்கியமானது. முடிந்தால்,‘N-95’ முகக் கவசம் அல்லது இரட்டைஅடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். இதை மீண்டும் மீண்டும் கூறுவது ஏனென்றால், தற்போதைய நிலைமையில் உயிர்வாழ்வது மிகவும் முக்கியமானது. நோயாளிகளின் எண்ணிக்கை மிகஅதிகமாக இருந்தால், முறையான சிகிச்சையும் பராமரிப்பும் வழங்குவது சுகாதாரத் துறைக்கு கடினமாகிவிடும்.கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள இரட்டை மரபணு மாறுபாடு அடைந் துள்ள வைரசை தடுப்பூசியால் ஓரளவிற்கு எதிர்த்துப் போராட முடிந்தது.மற்ற அனைத்து வகையான வைரஸ்களுக்கும் தடுப்பூசி பயனுள்ளதாகவே இருக்கும்.இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.