திருவனந்தபுரம்:
தடுப்பூசி விலை நிர்ணயம் செய்யும் உரிமையை, தனியார் மருந்துக்கம்பெனிகளிடமே விட்டுக் கொடுத்த,மத்திய பாஜக அரசின் தடுப்பூசிக் கொள்கைக்கு எதிராக, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்காடு சட்டமன்றத் தொகுதிவேட்பாளரும், வழக்கறிஞருமான சி.பி. பிரமோத் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம், தனது ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்போவதாக அறிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமானது, தனது ‘கோவாக்சின்’ தடுப்பூசியை மாநிலங்களுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய்க்கும் விற்போம்என்று கூறியுள்ளது. இரண்டு நிறுவனங்களுமே தன்னிச்சையாக இந்தவிலை அறிவிப்பைச் செய் துள்ளன. இதன் உயர்வை மத்திய பாஜக அரசும் தடுக்காமல் அனுமதித்துள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, 18 முதல்45 வயதிற்குட்பட்ட நாட்டின் 79 சதவிகித மக்களை, இலவச தடுப்பூசி பெறுவதற்கான தகுதியிலிருந்து விலக்கி வைக்கும் நியாயமற்ற செயல்பாடு என்பதுடன், அரசியல் சட்டப் பிரிவு 14-இன் கீழ் பாரபட்சமானதும் ஆகும் என்று வழக்கறிஞர் சி.பி. பிரமோத், கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பிரமோத் சார்பில் வழக்கறிஞர் அதுல் ஷாஜி மற்றும் அன்வின் ஜான்ஆண்டனி ஆகியோர் தாக்கல் செய்தஅந்த மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:தடுப்பூசி நிறுவனங்களின் விலைநிர்ணயம் தன்னிச்சையானது மற்றும்பாரபட்சமானது. தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயத்தை அனுமதித்ததன் மூலம், கொரோனா தடுப்பூசியை, மத்திய அரசே, தனதுபொறுப்பில் மொத்தமாக கொள் முதல் செய்து, மாநிலங்களுக்கு விநியோகிக்கும் என்ற முந்தைய நிலைபாடு மற்றும் கடமையிலிருந்து விலகுகிறது. தடுப்பூசிக்காக மாநிலங்களை சந்தையில் போட்டியிட வைக்கும் மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கை சட்டவிரோதமாகும்.இலவச தடுப்பூசிகளுக்கான தகுதியிலிருந்து 45 வயதிற்கு உட்பட்ட குடிமக்களை (மக்கள் தொகையில் 79% பேர்) விலக்குவது ஒரு நியாயமற்ற வகைப்பாடு ஆகும். இந்த வேறுபட்ட விலைகள் இந்திய அரசியலமைப்பின் 14-ஆவது பிரிவை மீறுவது மட்டுமல்லாமல், தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் உள் ளது. யுனிவர்சல் நோய்த்தடுப்பு மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கும் எதிரானது.உலகிலேயே, கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயத்தை உற்பத்தியாளர்களிடமே ஒப்படைத்த ஒரேநாடு என்றால், அது இந்தியாவாகத் தான் உள்ளது. மத்திய அரசின் இந்தநிலைப்பாட்டால், கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
உலகளாவிய நோய்த்தடுப்பு செயல்முறை மட்டுமே பேரழிவைத்தணிப்பதற்கான ஒரே தீர்வாக இருப் பதால், கொரோனா தடுப்பூசிகளை அதன் உற்பத்தியாளர்களிடமிருந்து நியாயமான விலையில் வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் அதிலிருந்துவிலகுவது, நாட்டுக் குடிமக்களின் நலன் சார்ந்ததாக இல்லை.உற்பத்தி செய்யப்படும் 50 சதவிகித தடுப்பூசிகள் மாநிலங்களுக் கும் மற்றவர்களுக்கும் உற்பத்தியாளர்களின் விருப்பப்படி விடப்படும் என்பது, சந்தையின் நிர்ப்பந்தங்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் இலாபநோக்கங்களைத் தாண்டி பரந்த அளவில்- நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களின் சுகாதார நலன்களையும் மீறும் வகையில் உள்ளது. இதுதடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.
இன்று வீடுகள் முன்பு முழக்கப் போராட்டம்...
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைக்கு எதிராக, இடது ஜனநாயக முன்னணி (LDF) விடுத்த அறைகூவலின்படி கேரளம் முழுவதும் புதனன்று ‘வீடுகள் முன்பு முழக்கம் எழுப்பும் போராட்டம்’ நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு கூடுதல் விலை, தனியாருக்கு அதைவிடவும் அதிக விலை என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொரு வீட்டின் முன்பும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு இந்த முழக்கம் எழுப்பும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பல லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.