திருவனந்தபுரம், டிச. 4 - மழை வெள்ளப் பாதிப்பி லிருந்து தமிழ்நாடு மீண்டு வர உறுதுணையாக இருப்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பெஞ்சால் புயலால், தமிழகம் இதுவரை கண்டி ராத பாதிப்பைச் சந்தித்துள் ளது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை - வெள்ளம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. பல கிராமங்கள், முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் சிக்கின. பெஞ்சால் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய வில்லை. பல மாவட்டங் களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை.
பாதிக்கப்பட்ட மக்க ளுக்கான முதற்கட்டமாக உணவு, குடிநீர் வழங்கும் பணிகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு உதவ தயா ராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள் ளார்.
அதில், “பெஞ்சால் புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டுவரும் தமிழ்நாட்டு மக்களுடனேயே எங்களின் எண்ணங்கள் உள்ளன. இந்தச் சவாலான நேரத்தில் தமிழ்நாட்டுடன் கேரளம் உறு துணையாக நிற்கிறது. தமிழ்நாட்டுக்கு தேவை யான அனைத்து உதவிகளை யும் செய்ய கேரளம் தயா ராக உள்ளது. ஒன்றிணை ந்து இதிலிருந்து மீண்டு வரு வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.