கண்ணூர் / கொச்சி:
பேரழிவு காலங்களில் மக்களை கண்ணின் மணிபோல் பாதுகாத்த எல்டிஎப் அரசாங்கத்தை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தங்களுக்கு உண்டு என்பதுபோல் மக்கள் திரண்டு வருகிறார்கள். வளர்ச்சியின் முன்னேற்றத்தை பிரகடனம் செய்து வலம் வரும் இடது ஜனநாயக முன்னணியின் தலைவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவளித்து வருகிறார்கள்.
இடது ஜனநாயக முன்னணி அரசு ஐந்தாண்டுகளில் இரண்டு பெருவெள்ளங் களையும், நிபாவையும், கோவிட்டையும் மக்களின்ஒத்துழைப்போடு எதிர்கொண்டதை தங்கள் சொந்தஅனுபவமாக மக்கள் ஏற்றுக்கொண்டு கரவொலி எழுப்புகிறார்கள். சிறிய கிராமங்களிலும் பெரும்நகரங்களிலும் இடது ஜனநாயக முன்னணிக்கு பெருகி வரும் ஆதரவை பறைசாற்றி வருகின்றன கேரளத்தின் வடக்கு, தெற்கு பிரச்சாரபயணங்கள். மத்திய விசாரணை முகமைகளை யும், பெரும்பான்மை- சிறுபான்மை வகுப்பு வாத அணிவகுப்புகளையும், அவற்றுடன் கைகோர்க்கத் தயங்காத யுடிஎப் சந்தர்ப்பவாதத்தை யும் தோலுரித்துக் காட்டும் தலைவர்களின் உரைகளை ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள்.
சிபிஎம் மாநில பொறுப்பு செயலாளர் ஏ.விஜயராகவன் தலைமையிலான எல்டிஎப் வடக்கு மேம்பாட்டு பிரச்சார இயக்கம் கண்ணூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தனது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தது. செவ்வாயன்று முதல்வர் பினராயி விஜயனின் பிறந்த மண் பினராயி கிராமத்தில் உற்சாக அணிவகுப்புடன் மக்கள் வரவேற்பு அளித்தனர். பினராயி, பானூர், இரிட்டி,மானந்தவாடி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.பயணக்குழு தலைவர் ஏ.விஜயராகவன், கே.பி.ராஜேந்திரன், பி.சதிதேவி, பி.டி.ஜோஸ், கே.பி.மோகனன் உள்ளிட்டோர் பேசினர்.
தெற்கு பகுதியின் பிரச்சார பயணம் திங்களன்று கொல்லம் மாவட்டம் ஞாரக்கலில் இருந்து தொடங்கியது. பரவூர், மூப்பத்தடம், அலுவாவில் வரவேற்புகளுக்குப் பிறகு அங்கமாலியில் நிறைவடைந்தது. செவ்வாயன்று பெரம்பாவூர், கோலஞ்சேரி, பிரவம், முவாற்றுப்புழா, கோதமங்கலம் ஆகிய இடங்களில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பயணக்குழு தலைவர் பினாய் விஸ்வம், உறுப்பினர்கள் எம்.வி.கோவிந்தன், தாமஸ் சாழிக்காடன் எம்.பி. வழக்கறிஞர். பி. வசந்தம், வர்கலா பி. ரவிக்குமார்,மேத்யூஸ் கோலஞ்சேரி, வி சுரேந்திரன் பிள்ளை, அப்துல் வஹாப், டாக்டர். ஷாஜி கடமலா ஆகியோர் பேசினர்.இந்த முறையும் கேரளம் சிவக்கும் என்பதை, வடக்கு- தெற்கு பகுதிகளில் பிரச்சார பயணக்குழு செல்லும் வ்வொரு வரவேற்பு மையமும் பிரகடனம் செய்து வருகின்றன.