கேரளத்தில் உள்ள கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து. இதில் 4 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கேரளத்தில் உள்ள கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யு.பி.எஸ். பொருத்தப்பட்டிருந்த அறைக்குள் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிளம்பிய புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, யுபிஎஸ் அறைக்கு அருகில் இருந்த அறையில் இருந்த நோயாளிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நோயாளிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.