states

img

கொச்சி: ஹிஜாப் அணிந்து வர மாணவிக்கு அனுமதி வழங்க பள்ளிக்கு உத்தரவு!

கேரளத்தில், இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்க கொச்சி தனியார் பள்ளிக்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.
கேரளத்தின் கொச்சியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியான செயின்ட் ரீட்டா பப்லிக் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வர கடந்த 10-ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மாணவியின் தந்தை தனது மகளின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் உரிமையை வலியுறுத்தினார். இது மாநில அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, அப்பள்ளிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது. இது தொடர்பாக, எர்ணாகுளம் துணை கல்வி இயக்குநர் சமர்பித்த அறிக்கையை தொடர்ந்து, தடையை நீக்கி மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கேரளம் போன்ற மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநிறுத்தும் மாநிலத்தில், எந்தவொரு மாணவரும் இதுபோன்ற ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. எந்தவொரு கல்வி நிறுவனமும் அரசியலமைப்பு உரிமைகளை மீற அனுமதிக்கப்படாது. இந்த விஷயத்தில் அரசு தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.