states

img

மதம்சார் அரசியலை கேரளம் ஏற்கவில்லை... ஏ.விஜயராகவன் பேட்டி...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர். தேர்தலுக்கு முன்பும் அதன் பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மத வேற்றுமையை கேரள மக்கள் ஏற்கவில்லை. லீகின் மதச்சார்பு அரசியலையும் அதே தன்மை கொண்ட பாஜகவையும் யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த தேர்தலில் அவர்களால் அதிகம் முன்னேற முடியவில்லை என்று சிபிஎம் மாநிலப் பொறுப்புச் செயலாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
இந்த தேர்தலில் இடதுசாரிகள் வேறு எந்த காலத்தையும் விட சிறந்த மக்கள் ஆதரவைப் பெற்றனர்.யுடிஎப் ஒரு பெரிய சிதைவை நோக்கி செல்கிறது. கேரள காங்கிரஸ்(எம்) அந்த முன்னணியை விட்டு வெளியேறியதன் மூலம் யுடிஎப் சரிவு தொடங்கியது. இந்தத் தேர்தலுடன் அந்த சரிவின் வேகம் அதிகரிக்கும் என்று சிபிஎம் மதிப்பீடு செய்துள்ளது என்று அவர் கூறினார். பாஜகவும் கேரளாவில் முன்னேற முடியவில்லை. அதுதான் இந்த தேர்தலின் முக்கியத்துவம். தேர்தல்களின் போதும் அதற்குப் பின்னரும் சிபிஎம்-க்கு எதிராக பெரும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆறு சிபிஎம் ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். இறுதியாக, காஞ்ஞாங்காட்டைச் சேர்ந்த ஒரு டிஒய்எப்ஐ ஊழியர் கொல்லப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை அணி திரட்ட முடிவு செய்துள்ளது. ஜனவரி 24 முதல் 31 வரை வீட்டு விஜயம் நடைபெறும். மக்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடக்கும். வீட்டு சந்திப்பு இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அதன் பகுதியாக மக்களை இணைக்கவும் உதவும், இது சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாக்கும்- கேரளத்தின் விரிவான வளர்ச்சியை உறுதி செய்யும். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து ராஜ்பவன் முன்னால் நடக்கும் போராட்டத்திற்கு கட்சி ஒருமைப்பாட்டை தெரிவிக்கிறது. ஒவ்வொரு பஞ்சாயத்தும் போராட்டத்திற்கு வணக்கம்செலுத்துகிறது. இதற்கு தங்களது ஒருமைப்பாட்டை அறிவிக்குமாறு மக்களை சிபிஎம் கேட்டுக்கொள்கிறது.

தேர்தல் முடிவு பாஜகவின் எழுச்சியைக் குறிக்கவில்லை. இடதுசாரிகளின் வாக்கு என்பது இந்த சமூகத்தின் உழைக்கும் மக்கள்,தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாக்கு. காங்கிரஸ் இப்போதுபின்பற்றும் சந்தர்ப்பவாத கொள்கைக்கு மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. எந்த இனவாதத்துடனும் இணைந்து நிற்கக் கூடாது. மதச்சார்பின்மையை நிலைநாட்ட வேண்டும் என்றும் விஜயராகவன் செய்தியாளர்களிடம் கூறினார்.