ஓணம் என்பது கேரளத்தின் தேசியத் திருவிழா என்பதோடு பண்டைக்கால மாவேலி மன்னனின் ஆட்சியை நினைவுபடுத்துவதாகும். அந்த ஆட்சியானது அனைவரையும் சமமாகக் கருதிய ஆட்சியாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் நமக்கு நினைவுபடுத்துவது என்னவென்றால் எவ்வித விரோத குரோதங்கள் இல்லாத ஒரு உலகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.
இவ்வாண்டு ஓணத்தில் ஒரு நீதியான சமூகத்தை உருவாக்க நமது உறுதிமொழியை நாம் புதுப்பிப்போம். இது அதனுடைய அனைத்துக் குடிமக்களுக்கும் ஆரோக்கிய த்தைப் பேணுவதற்கு சமவாய்ப்புகளை உறுதி செய்யும். அவ்வாறு நடந்தால்தான் கோவிட்-19 போன்ற தொற்றுக் கிருமிகளை நாம் சக்திவாய்ந்த முறையில் எதிர்த்துப் போராட முடியும். இந்தப் போராட்டத்தைத்தான் உலகம் தற்போது நடத்திக் கொண்டிருக்கிறது. தீக்கதிர் நாளிதழின் அனைத்து வாசகர்களு க்கும் ஓணம் நல்வாழ்த்துகள்.
பினராயி விஜயன், முதலமைச்சர், கேரள அரசு