states

img

கேரள ஆளுநரை வேந்தர் பதிவியிலிருந்து நீக்கும் மசோதா நிறைவேற்றம்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கவுரவப் பொறுப்பு  என்ற முறையில் ஆளுநர், ‘வேந்தர்’ பதவியை வகித்து வருகிறார். இந்நிலையில், கேரளப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்து, அவர்களை  பதவியிலிருந்து வெளியேறுமாறு ஆளுநர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து பெரும் பிரச்சனை வெடித்தது.  ஆளுநரின் இதுபோன்ற பல நடவடிக்கைகளை அம்மாநில  அரசும், கேரளத்தின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். இந்த நிலையில், ஆளுநரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவுக்கு கடந்த நவம்பர் மாதம், பினராயி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆரிப் முகமது கானை வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.