states

img

பொய் வாக்குமூலம் பெற முயன்ற அமலாக்கத் துறை மீது நீதி விசாரணை... பினராயி தலைமையிலான எல்டிஎப் அரசு அடுத்த அதிரடி

திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சொப்னாசுரேஷை மிரட்டி, கேரள முதல்வர்பினராயி விஜயனுக்கு எதிராக பொய் வாக்குமூலம் பெற முயன் றது குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை மீது சிஆர்பிசி 120-பி, 195-ஏ, 192, 167ஆகிய 4 பிரிவுகளில் கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.அதிர்ந்துபோன மத்திய அமலாக்கத்துறை, கேரள காவல் துறையின் வழக்குக்கு தடைகோரி உயர் நீதிமன்றம் சென்றது.ஆனால், “மார்ச் 30 வரை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கைது நடவடிக்கைகள் எதையும் கேரள போலீசார் மேற்கொள்ளக் கூடாது” என்று மட்டும்உத்தரவிட்ட நீதிமன்றம், மற்றபடிஅமலாக்கத்துறை கோரியபடி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது; எப்.ஐ.ஆரையும் ரத்து செய்யமுடியாது என்று கூறி விட்டது. 

பினராயி விஜயன் அரசை மிரட்டலாம் என்று கணக்குப் போட்டு கேரளத்திற்குள் புகுந்த மத்திய அமலாக்கத்துறை, தானாகவே இடிக்கிக்குள் சென்று மாட்டிய எலி-யின் கதையாக தற்போது விழித்துக் கொண்டிருக்கிறது.இதனிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட சொப்னா சுரேஷ், சரித் ஆகியோரை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக மத்தியஅமலாக்கத்துறை பொய் வாக்குமூலம் பெற முயன்றது தொடர் பாக, ஓய்வுபெற்ற நீதிபதி மோகனன் தலைமையிலான ஆணையம் அமைத்து நீதி விசாரணை நடத்தவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 26 அன்று நடைபெற்றஅமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் பெறப்பட் டுள்ளது.சர்ச்சைக்குரிய சொப்னாசுரேஷின் ஒலிப்பதிவு வாக்குமூலம், குற்றம்சாட்டப்பட்டவர் களில் மற்றும் ஒரு நபரானசரித்தின் கடிதம் ஆகியவை உள்பட ஐந்து விவகாரங்கள் குறித்து ஆணையம் விசாரிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.