திருச்சூர்:
எல்டிஎப் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கேரளத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டாக்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், இது இதுவரை இல்லாத சாதனை எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துஉள்ளார்.
திருச்சூரில் மாவட்ட பட்டா மேளாவை செவ்வாயன்று (பிப்.16) முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
பட்டா விநியோகம் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தன. பட்டா கிடைக்காதது ஒரு பெரிய புகாருமாகும். இதற்கு தீர்வு காணவே அரசாங்கம் முயன்று வருகிறது. இன்னும்கூட பட்டா கிடைக்காதவர்கள் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து தகுதியான அனைவருக்கும் பட்டா வழங்கப்படும்.மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம அலுவலகங்களும் ஸ்மார்ட் ஆக்கப்படும். அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் கிராம அலுவலகங்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்படும். புதிய கட்டடங்களும் கட்டப்படும். நிர்வாக நடவடிக்கைகளுக்கு வசதியாக மின் ஆளுமை அலுவலக வசதிகளும் செய்யப்படும். திறன்மிக்க சேவை மக்களுக்கு கிடைக்கும். இந்த வகையில் கேரளம் நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.இவ்வாறு பினராயி விஜயன் பேசியுள்ளார்.