states

img

கேரளத்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு.... பரிசோதனையை அதிகரிக்க தீவிர திட்டம்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட் நோய் தொற்று அதிகரித்து வருவதால், முடிந்தவரை அதிகபட்சமாக சோதனைகள் நடத்த சுகாதாரத் துறைதீவிரத் திட்டத்தை தொடங்கியுள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். கோவிட் தொற்று உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து நோய் பரவுவதை குறைக்கதீவிர சோதனை நடத்தப்படு கிறது என்றார் அமைச்சர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும்கூறியதாவது: குறைந்த அளவில் தடுப்பூசி போடப் பட்ட மாவட்டங்களுக்கு சோதனை நீட்டிக்கப்படும். நோய் கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் கிளஸ்டர்களில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்கள் பரிசோதிக்கப்படுவார்கள். சுகாதார ஊழியர்கள், கோவிட் முன்னணி போராளிகள், வர்த்தகர்கள் மற்றும்காப்பகங்களில் கூடுதல்கவனம் செலுத்தி சோத னைகள் நடத்தப்படும். சோதனைக்கு அவர்களாகவே முன்முயற்சி எடுக்க வேண்டும். நோயை முன்கூட்டியே கண்டறிவது தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற உதவும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச கோவிட் பரிசோத னைகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

கிளஸ்டர் பகுதியில் நேரடியாக சென்றும் முகாம்கள் மூலமாகவும் மாதிரிகள்சேகரிக்கப்படும். தாமதமின்றி சோதனை முடிவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, தொண்டைப் புண் உள்ளவர்களும் நோய்தொற்ற வாய்ப்புள்ளவர் களும் கோவிட் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் அனைவரும் பரிசோதிக்கப்பட வேண்டும். மூச்சுத்திணறல் பிரச்சனை கள் மற்றும் கடுமையான நோய்கள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்துகோவிட் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். அத்தகையவர்கள் கோவிட் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். திருமணங்கள் மற்றும் இறுதிநிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொள்கிறவருக்கு கோவிட் வந்தால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரிடமும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

முதலாவதாக கோவிட் தெரியவந்த, 2020 ஜனவரி 30 அன்று ஆலப்புழா என்ஐவியில் மட்டுமே இருந்தகோவிட் பரிசோதனை ஏற்பாடு, இப்போது மாநிலம்முழுவதும் உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்துஅரசு மருத்துவமனைகளிலும் ஆன்டிஜென் பரிசோதனை செய்யலாம். 120க்கும்மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. 14 நடமாடும் ஆய்வகங்கள்   மூலமாகவும் சோதனை செய்யப்படுகிறது.சோதனையைப் பொறுத்தவரை, டெஸ்ட் பெர் மில்லியன் பை கேஸ் பெர் மில்லியன் என்ற அறிவியல் முறையை கேரளம் பின்பற்றுகிறது. கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், ஆய்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மாநிலத்தில் கோவிட் தினசரி ஆய்வு 1,99,456 ஆகஅதிகரிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் சோதனைகள் ‘ஆய்வக நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மை அமைப்பு’ (எல்டிஎம்எஸ்) போர்டல்,ஒருங்கிணைந்த ஆன்லைன் அமைப்பு மூலம் ஒருங்கி ணைக்கப்படுகிறது. இதுமாவட்ட கோவிட் கட்டுப் பாட்டு அறை மற்றும் மாநில கோவிட் கட்டுப்பாட்டு அறை மூலம் குறியிடப்படுகிறது. மொபைல் மூலம் மக்கள் நேரடியாக சோதனை முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.