கேரளத்தில் வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் ஏற் பட்ட மோசமான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்க ளின் மறுவாழ்வுக் காக உடனடியாக நிதி யுதவி வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்க ளின் கடனை முழுமை யாக தள்ளுபடி செய்யவும் ஒன்றிய அரசை கேரள சட்ட மன்றம் ஒருமனதாக கேட்டுக் கொண்டுள்ளது.
விதி 275 இன் கீழ், இந்த தீர்மானத்தை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதா வது,“உதவி தாமதம் நிவாரணப் பணி களைப் பாதிக்கிறது. சேத விவரங்கள் அடங்கிய மனுவை மாநில அரசு அளித்துள்ளது. ஒரு பிரதேசம் முழு வதும் அழிந்துவிட்டது. இந்த துயரம் நாட்டில் இதுவரை பதிவாகிய மிகப் பெரிய நிலச்சரிவுகளில் ஒன்றாகும். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வை யிட்ட பிரதமரிடமும், பின்னர் நேரில் சென்றும் உதவி கோரப்பட்டது. ஆனால் இதுவரை எந்த உதவியும் வழங்கப் படவில்லை.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத் தின்படி, முண்டக்கை நிலச்சரிவு தீவிர பேரிடராக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்த பல மாநிலங்களுக்கு கோரிக்கை இல்லாமல் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பரிசீலனை கேரளத்துக்கு கிடைக்காதது வருத்தமளிக்கிறது. பேரிடரால் பாதிக் கப்பட்டவர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் களை தள்ளுபடி செய்வது குறித்து விவாதிக்க மாநில அளவிலான வங்கி யாளர்கள் குழுவைக் கூட்ட மாநில அரசு முன்முயற்சி எடுத்தது. இது தொடர்பாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரணச் சட்டம், 2005இன் பிரிவு 13இன் கீழ், தேசிய பேரிடர் நிவாரண ஆணையம், பேரிடர் பாதிக்கப்பட்டவர்களின் கடன் களை தள்ளுபடி செய்யலாம். இந்த அதி காரத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும்” என தீர்மானம் கோரியுள்ளது.