கொச்சி:
ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டுவர உள்ளதாக கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி எர்ணாகுளம் பாலாரி வட்டத்தைச் சேர்ந்த பாலி வடக்கன் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ். மணிக்குமார், நீதிபதி ஷாஜி பி. ஷாலிஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கேரள அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.
சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர எவ்வளவு காலம் ஆகும் என்பதை புதன்கிழமை தெரிவிக்குமாறு சட்டத்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் தங்களை ஒரு தரப்பாகச் சேர்க்க ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் அமைப்பான ‘டொர்க்’ விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. முன்னதாக பிரபலமான விளம்பரங்களைக் கொடுத்து பணத்துக்காக இளைஞர்களை ஏமாற்றுவதாகவும், அப்படி ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் திருவனந்தபுரத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் பாலி வடக்கன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.