states

img

மாதக் கணக்கில் காத்திருந்து சலிப்படைய வேண்டாம்.... ரேஷன் கார்டை மக்களே கைப்பட அச்சிடலாம்.. கேரள அரசின் மற்றுமொரு சாதனை...

திருவனந்தபுரம்:
குடும்ப அட்டைக்காக காத்திருக்க வேண்டாம். சுயமாகவே மின்னணு குடும்ப அட்டைகளை (இ-ரேஷன் கார்டு) பதிவிறக்கும் செய்து கொள்ளலாம் என்று பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்துள்ளது.முதற்கட்டமாக இத்திட்டத்தை தலைநகர் திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று (பிப்.9) உணவுத்துறை அமைச்சர்பி.திலோத்தமன் தொடங்கி வைத்தார். இது படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் பயன்பெற அட்சய கேந்திரங்கள் மூலம் அல்லது பொது விநியோகத்துறை இணையதளத்தில் உள்ள குடிமக்கள் உள்நுழைவு மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வட்ட வழங்கல் அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரரின் உள்நுழைவில் பிடிஎப் வடிவிலான அட்டை கிடைக்கும். பிடிஎப் ஆவணத்தைத் திறப்பதற்கான கடவுச்சொல் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். மின்னணு ரேஷன் கார்டை அச்சிட்டும் பயன்படுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை இ-கருவூல முறை மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். அதேநேரம் புத்தக வடிவிலான குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலகங்கள் மூலம் தொடர்ந்து கிடைக்கும்.