திருவனந்தபுரம்
நடந்து முடிந்த சட்டபேவைத் தேர்தலில் இடதுசாரிகள் அபார வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றினர். பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டு தற்போது அங்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொழில்துறை அமைச்சராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ராஜீவ் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். இதே போல அருவிக்கரை மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஸ்டீபனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.