திருவனந்தபுரம்:
கேரளாவிற்கு மட்டுமல்ல, வேறு எந்த மாநிலத்திற்கும் உணவுகருவிகள் (கிட்) ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரிசி மற்றும் கோதுமை மட்டுமே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறுதிட்டங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. முன்னுரிமை குழுக்களுக்கு ஐந்து கிலோ அரிசிஒதுக்கப்படுகிறது, மேலும் மாதத்திற்கு 35 கிலோ அரிசி அந்தியோதயா அன்னயோஜனாவுக்கு வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் ஊரடங்கின்போது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஐந்து கிலோ அரிசிஅல்லது கோதுமை வழங்கப்பட்டது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜய் எஸ்.குமாருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அளித்த பதிலில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திற்கு மத்திய அரசு உணவு கருவிகளை (கிட்) வழங்குகிறது, எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்பது அவரது கேள்வி.
கேரளாவில் மத்திய அரசு வழங்கும் உணவுப் பொருட்களையே பைகளில் நிரப்பி மாநிலஅரசு வழங்குவதாக பாஜக மற்றும்காங்கிரஸ் ஆகிய இரண்டும் உள்ளாட்சி அமைப்பு மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்திருந்தன. இதையே பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் செய்தியாளர் கூட்டத்திலும் கூறினார். காங்கிரஸின் கே.சுதாகரன் எம்பி-யும் இந்த முறையில் பிரச்சாரம் செய்தார். மத்திய அரசு வழங்கிய கிட் மற்ற மாநிலங்களில் ஏன் கிடைக்கவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்தார்.