states

img

நிலச்சரிவு ஏற்பட்டு 50 நாட்களாகியும் ஒரு ரூபாய் கூட வழங்காத மோடி அரசு

திருவனந்தபுரம் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பாயும் சாலி யாறு பகுதியில் உள்ள மலைச்சரிவில் கடந்த ஜூலை 30 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கொடூர மான நிலச்சரிவில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, அட்டமலை, புஞ்சரி மட்டம் ஆகிய கிராமங்கள் உருக்குலைந்த நிலையில், 336 பேர் உயி ரிழந்தனர். 76 பேர் காணாமல் போயுள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து இயல்புநிலையை இழந்தன. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசு துரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண நிதி வழங்கி நிலச் சரிவால் உருக்குலைந்த சாலியாறு சாரல் பகுதியை 50 நாட்களுக்குள் இயல்புநிலைக்கு கொண்டு வந்தது.

மோடி அரசின் இயலாமையை மறைக்க...

ஆனால் பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசு, வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 50 நாட்களை நெருங்கியுள்ள பொழுதிலும், இன்னும் ஓரு ரூபாய் கூட நிவாரணம் மற்றும் இழப்பீடு தொ கையை வழங்காமல்  இழுத்தடித்து வருகிறது. இதனை மறைக்க 4 நாட்க ளுக்கு முன் கேரள பாஜக தலைவர்க ளில் ஒருவரான அனூப் ஆண்டனி ஜோசப்,”இறுதிச் சடங்கிற்கு ரூ.75,000 செலவிடப்பட்டுள்ளது. தன்னார்வ லர்களின் உணவுக்காக ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பிரம் மாண்ட ஊழல் அரங்கேறியது” என ஆதாரமற்ற மற்றும்  கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

பாஜகவின் இந்த பொய்யான குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முதல் செப்., 23ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும், செப்., 24 அன்று மாவட்ட மையங்களில் மாபெரும் கண்டனப் பேரணியும் என மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு அழைப்பு விடுத் துள்ளது. 

இதுகுறித்து சிபிஎம் கேரள மாநி லக்குழு விடுத்துள்ள அறிக்கையில், “வயநாடு நிலச்சரிவின் மறுவாழ்வைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன. பேரிடர் ஏற்பட்டு 50 நாட்களாகியும் ஒன்றிய அரசின் உதவித்தொகையாக ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இந்த உண்மையை மறைக்கவே பாஜக பொய்க் கதையை பரப்பி வருகிறது.  வயநாடு மறுவாழ்வை நாசப்படுத்த வும், ஒன்றிய அரசு தனது உதவியை ரத்து செய்யும் நோக்கத்தில் கேரளா வுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை எதிர்த்து வெற்றி பெற மக்கள் சமூகம் முன்வர வேண்டும்” என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.