புதுதில்லி/திருவனந்தபுரம் முண்டக்கை (வயநாடு) பேரி டர் மீட்புப் பணிகளில் ஈடு பட்ட விமானப்படையின் செலவுக்காக கேரளத்தின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.153.47 கோடியை மோடி அரசு கைப்பற்றி யுள்ளது.
ஹெலிகாப்டர்களுக்கான கட்ட ணத்தை எஸ்டிஆர்எப் நிதியில் இருந்து எடுத்துக் கொண்டதாக ஒன்றிய உள்துறை இணை அமைச் சர் நித்யானந்த் ராய் மாநிலங்கள வையில் தெரிவித்தார். பேரிடர் மறு வாழ்வுக்காக கேரளம் கோரிய தொ குப்பை ஒன்றிய அரசு மறுத்த அதே நேரத்தில் மாநிலத்திற்கான வழக்கமான ஒதுக்கீட்டில் இருந்து பெரும் தொகை பறிக்கப்பட்டுள் ளது.
இந்நிலையில் முண்டக்கைப் பேரிடர் பாதிப்பை ஒன்றிய அரசு புறக்கணித்ததைக் கண்டித்து கேர ளம் வியாழனன்று போர்க்கோலம் பூண்டது. எல்.டி.எப் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம், ஒன்றிய அரசின் தொடர்ச்சியான புறக்கணிப்புக்கு எதிரான வலு வான எச்சரிக்கையாக அமைந் தது.
ராஜ்பவன் நோக்கி பேரணி
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் முன்பு நடந்த ஆர்ப்பாட் டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தொடங்கி வைத்தார். முன்னதாக மியூசியம் சந்திப்பில் இருந்து பேரணி நடைபெற்றது. இதுபோல் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை நோக்கி பேரணிகளும் ஆர்ப்பாட் டங்களும் நடைபெற்றன. பாலக்கா டில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் துவக்கி வைத் தார். மாநிலம் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட போது நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி மற்றும் மண் ணெண்ணெய்க்கு என 290.74 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளது.
கேரளத்தின் எஸ்டிஆர்எப் நிதியாக ரூ.782.99 கோடி உள்ளது, இதில் கடந்த ஆண்டின் ரூ.394.99 கோடியும், நடப்பு ஆண்டின் ரூ.388 கோடியும் அடங்கும். இதை முண்டக்கை பேரிடர் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதே ஒன்றிய அரசு நிலைப் பாடாக இருந்தது. இதிலிருந்து தான் 153.47 கோடி ரூபாய் கைப் பற்றப்பட்டது. மீதமுள்ள தொகை 629.52 கோடி மட்டுமே உள்ளது. முண்டக்கை- சூரல்மலை இழப்பு களை மதிப்பீடு செய்ய வந்த மத்தியக் குழு அளித்த அறிக்கை யை உயர்மட்டக் குழு ஆய்வு செய்து, பணத்தை பிடித்தம் செய்ய பரிந்துரை செய்தது என்றும் அமைச்சர் கூறினார்.
மாநில அரசுக்கு பொறுப்பு
இயற்கை பேரிடர்களின் போது பேரிடர் மேலாண்மைக்கு மாநில அரசுகளே முதன்மையான பொறுப்பு. தேவையான பொருட் கள் மற்றும் நிதியுதவி அளித்து மையம் உதவும். நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதியுதவியை மாநில அரசு வழங்க வேண்டும். 2024-25ஆம் ஆண்டில் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.388 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் மத்திய பங்கு ரூ.291.20 கோடி, மாநில பங்கு 96.8 கோடியாகும். இந்த ஆண்டு மத்திய பங்கு முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சேமித்த தொகையை பேரிடர் நிவாரணத்திற்கு பயன் படுத்தலாம் எனவும், மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்ப டையில் தேசிய பேரிடர் மேலா ண்மை நிதியில் இருந்து கூடுதல் உதவி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
உதவி அவசர தேவை: கேரள எம்பிக்கள் வலியுறுத்தல்
கேரள எம்பிக்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முண்டக்கை பேரிடர் மீட்புப் பணி களுக்கு மத்திய நிதியுதவியை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முண்டக்கையை தேசிய பேரிடராக வோ அல்லது இயற்கை பேரிடரா கவோ L3 வகையாக அறிவிக்க வேண்டும். மாநில அரசு கோரிய ரூ.2221 கோடியை விரைவில் வழங்குமாறும் உள்துறை அமைச்ச ரிடம் எம்.பி.க்கள் கேட்டுக் கொண்ட னர். வியாழனன்று (டிச.5) மாலைக் குள் பதில் அளிக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்தார்.
முதல்வர் கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தின் முடிவின்படி எல்.டி.எப்- யு.டி.எப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்தித்தனர். அந்த மனுவின் நகல் பிரதமரிடமும் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள எம்.பி.க்கள் இணைந்து ஒன்றிய அரசை அணுகுவது இதுவே முதல் முறை. யுடிஎப் எம்பிக்கள் கேரளாவுக்காக குரல் கொடுக்காதது அம்மாநிலத்தில் தீவிர விவாதமாகி இருந்தது. திருச்சூர் எம்.பி.யும், ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபி, மற்றொரு எம்.பியான அமைச்சர் ஜார்ஜ் குரியன், மாநிலங்களவை உறுப்பினர் பி.டி.உஷா ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை.
நிலச்சரிவு காரணமாக ரூ.2221 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சரிடம் எம்.பி.க்கள் தெரிவித்தனர். பிரதமர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உதவிகள் வழங்குவதாக கூறினார். ஒன்றிய அரசிடம் விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை ஒரு பைசா கூட வழங்கப் படவில்லை. இது கேரளம் மற்றும் வயநாடு மக்களுக்கு எதிரான கடு மையான பாகுபாடு என எம்.பி.க்கள் மனுவில் கூறியுள்ளனர். சிபிஎம் மக்களவைத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மாநிலங்க ளவை துணைத் தலைவர் ஜான் பிரிட்டாஸ், இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் வி.சிவதா சன், ஏ.ஏ.ரஹீம், பி.பி.சுனீர், பி. சந்தோஷ் குமார், ஜோஸ் கே. மாணி, ஐக்கிய ஜனநாயக முன்ன ணியின் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் உள்துறை அமைச்சரை சந்தித்தனர்.