ஒன்றிய அமைச்சரும், மதச்சார் பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி மீதான சுரங்க முறைகேடு வழக்கை போலீஸ் ஐ.ஜி. சந்திரசேகர் தலை மையிலான சிறப்பு புலனாய்வு குழு விசா ரிக்கிறது. சுரங்க முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.ஜி.சந்திர சேகரை பணி செய்யவிடாமல் தடுத்து குமாரசாமி மிரட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் எச்.டி. குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.