கர்நாடக அரசு தேர்வு நுழைவு சீட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இருந்த பெண் தேர்வர் ஒருவரின் நுழைவு சீட்டில் சன்னி லியோன் அரை நிர்வாண புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதை அடுத்து, நுழைவு சீட்டின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அந்த பெண் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.