states

img

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது வழக்குப்பதிவு!

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2014இல் இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக கோபாலகிருஷ்ணன் இருந்தபோது, பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி தன்னை பணி நீக்கம் செய்து, சாதி ரீதியாக துன்புறுத்தியதாக துர்கப்பா என்பவர் அளித்த புகாரின் பேரில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் 16 பேர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.