states

img

மங்களூர் ஷோரூமில் வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி!

மங்களூருவில் உள்ள ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரும் ஒன்றில் திடிரென ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

எலக்ட்ரிக் வாகனங்களில் தீவிபத்து ஏற்படுவது தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் டாடா நிறுவனத்தின் நம்பர் 1 டாடா எலக்ட்ரிக் கார் ஒன்று மும்பையில் தீப்பிடித்து எரிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் நாகுரி பகுதியில் ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரும் ஒன்று அமைந்துள்ளது. வழக்கம்போல் செயல்பட்டு வந்த இந்த ஷோருமில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஷோரூம் முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிகள் வெடித்து சிதறின.இதில் பல லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து தீக்கிறையாகின. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.  

ஒகினாவா ஷோரூம் எரிந்து சாம்பலாக்கப்படுவது இது முதல்முறையல்ல. முன்னதாக சென்னையில் உள்ள ஒகினாவா ஆட்டோடெக் டீலர்ஷிப்பும் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.

இதுபோல ஓலா நிறுவன ஸ்கூட்டர்களும். பியூர் இவி ஸ்கூட்டர்களும் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பேட்டரி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.