states

img

விவசாயியை இடித்துத் தள்ளிய பாஜக எம்.பி.,... குறைகளைக் கூற வந்தவரிடம் ஆத்திரம்

பெங்களூரு:
கர்நாடகாவில் தன்னிடம் கோரிக்கை களை தெரிவிக்க வந்த விவசாயியை, பாஜக எம்.பி. ஒருவர் கீழே தள்ளி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

கர்நாடகத்தின் ஹவேரி-கடக் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சிவகுமார் உதாசி.பாஜக-வைச் சேர்ந்த இவர், தமது தொகுதிக்கு ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.அப்போது எம்.பி.யைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அவரிடம் தங்களின் கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து முறையிட்டுள்ளனர். ஆனால், சிவகுமார் அவற்றை உரிய முறையில் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, விவசாயி ஒருவர் தனது குறைகளைத் தெரிவிக்க முயன்றபோது, அதனைக் கண்டுகொள்ளாதது போல கடந்து சென்றதாகவும் தெரிகிறது. அதேநேரம் விவசாயியும் விடாமல் பின்னால் சென்று கோரிக்கைகளை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்.பி. சிவகுமார், அந்த விவசாயியை, வேகமாக இடித்துத் தள்ளி விட்டுள்ளார். இதற்கான வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. பாஜக எம்.பி.யின் இந்த செயலுக்கு சமூகவலைத் தளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.