ஜார்கண்ட்டில் வாட் வரியை குறைக்க கோரி பெட்ரோல் பங்குகளில் விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 22 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக மாநில அரசு குறைக்க வேண்டும் என்று பெட்ரோலிய முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதை வலியுறுத்தி செவ்வாயன்று ஜார்கண்ட்டில் பெட்ரோல் பங்குகளில் விற்பனை நிறுத்த போராட்டம் நடைபெற்றுள்ளது.