ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
சுரங்க விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும்,பலர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால்,அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார்.