states

img

முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பு!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டர். காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜம்மு - காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 90  இடங்களில், தேசிய மாநாடு, காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி 49 இடங்களை வென்றது. தேசிய மாநாடு 42, காங்கிரஸ் 6, சிபிஎம் 1 என இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. ஆம் ஆத்மி கட்சி ஆதரவின் மூலம் இந்த எண்ணிக்கை 50 ஆனது. சுயேச்சைகள் 4 பேர் தேசிய மாநாட்டு கட்சியில் இணைந் ததன் மூலம், எண்ணிக்கை பலம் 54 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டர். காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் சுரிந்தர் சவுத்ரி பதவியேற்றார்.
உமர் அப்துல்லா, ஏற்கெனவே, 2009-ஆம் ஆண்டு தன்னுடைய 28 வயதில் ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்று பணியாற்றியுள்ளார்.