ஸ்ரீநகர் 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் 3 கட்ட மாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 அன்று நடைபெறு கிறது. முதல் கட்ட வாக்குப்பதி வுக்கான தேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்து வாக்காளர்களிடம் போலியான அச்சத்தை உரு வாக்கி, அவர்களை மிரட்ட பாஜக விரும்புகிறது” என ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலை வருமான பரூக் அப்துல்லா குற் றம்சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் போல தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கி ரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்ற தேர்தலிலும் களம் கண்டுள் ளது. ஞாயிறன்று தேசிய மாநாட் டுக் கட்சி நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லாவின் 42ஆவது நினைவு நாளை முன்னிட்டு நசீம்பாக்கில் உள்ள நினைவி டத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்பு பரூக் அப்துல்லா பின்பு செய்தியாளர்களிடம் கூறுகை யில், “ஜம்மு-காஷ்மீரில் பாஜக வினர் இந்துச் சமூகத்தினரை அச்சுறுத்த விரும்புகின்றனர். முதலில் பாஜகவினர் ராமரின் பெயரைக் கூறி இந்துக்களிடம் வாக்கு கேட்டனர். ஆனால் இப்போதோ இந்துக்களை அச்சு றுத்த விரும்புகின்றனர். அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ பாஜக ரத்து செய்துவிட்டது. ஆனால், தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கிவிட்டது. இவை அனைத்துக்கும் பாஜக - மோடி அரசுதான் பொறுப்பு. நாங் கள் ஊடுருவல்காரர்கள் இல்லை. நாங்கள் யாரின் மாங்கல்யத்தை யும் பறிக்கவும் இல்லை. இந்தியா வின் சுதந்திரத்துக்கு முஸ்லிம் களும் சரிசமமாக பங்களித்துள்ள னர். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் என அனைவருக்கும் பொதுவானது தான் பாரதம். ஆனால் பாஜக உருவாக்க நினைக்கும் பாரதத்துக்கு நாங் கள் எதிரானவர்கள் என்பதை அமித்ஷாவிற்கு நான் நினைவு படுத்த விரும்புகிறேன். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகள் ஜம்மு-காஷ்மீ ரின் மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யும். ஜம்மு-காஷ்மீருக்கான பாஜக வின் தேர்தல் அறிக்கை வெறும் ஜூம்லா” என அவர் கூறினார்.