மரணத்தில் லாபம் பார்க்கும் விமான நிறுவனங்கள்
ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநக ரில் இருந்து தில்லி செல்லும் விமானக் கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அங்குள்ள சுற்றுலாப்பயணிகள் அனை வரும் உயிர் பயத்தில் ஸ்ரீநகரில் இருந்து தில்லி வந்து தங்கள் சொந்த ஊருக்கு விரைகின்றனர். இந்நிலையில் விமான நிறுவனங்கள் தங்களது விமான கட்டணத்தை திடீ ரென அதிகரித்துள்ளன. உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய போது உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மாணவர்களிடம் அதிக கட்டணம் மூலமாக விமான நிறு வனங்கள் கொள்ளையடித்தன. தற்போது விமானக்கட்டனத்தை அதி கரிக்கக் கூடாது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வேண்டு கோள் விடுத்த பிறகும் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. காஷ்மீரில் சிக்கியுள்ள சுற்றுலா பயணி களை அழைத்துவர ஸ்ரீநகரில் இருந்து தில்லி, மும்பைக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் ஸ்ரீநகர்-தில்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் ரூ.11,000 முதல் ரூ.13,000 ஆகவும், ஏர் இந்தியா விமானத்தில் ரூ.21,000 முதல் ரூ.23,000 ஆகவும் கட்டணம் உயர்த்தப் பட்டு உள்ளது.