states

img

ஹரியானாவில் வேலையின்மை கொடூரம்: இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இளைஞர்கள்!

குருகிராம், செப்.11- ஹரியானா மாநிலத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் பாஜக-விற்கு பெரும் தலைவலியாக மாறி யுள்ளது. இருப்பினும் புள்ளி விவ ரங்கள் மூலம் வித்தை காட்டி வாக்கா ளர்களை ஏமாற்ற மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசு முயற்சி த்து வருகிறது.

ஹரியானாவில் அக்டோபர் 10-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறு கிறது. தற்போது அங்கு பாஜக தலை மையிலான அரசு நடைபெறுகிறது. முதல்வராக மனோகர் லால்  கட்டார் பொறுப்பு வகிக்கிறார்.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவிர ஆம் ஆத்மி கட்சியும் தனியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

பாஜக ஆளும் ஹரியானாவில் வேலையின்மை அதிகம் என ஒன்றிய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின் றன. ஆனால், தற்போது வேலை யின்மை குறைந்திருப்பதாக அதாவது 9 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக தரவுகள் வெளி யிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹரியானாவில் வேலையின்மை போக்கப்படுவதாக அரசு கூறும் புள்ளி விவரங்கள் ஒரு ஏமாற்று வித்தை என்பது தெரிய வந்துள் ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டு லட்சத்துக்கும் மேற் பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

வேலையின்மையைப் போக்கத் தவறிய மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில்,  ஆங்கில நாளிதழ் ஒன்றின் செய்தியாளரிடம் பேசிய ஹரியானா முதல்வரின் முதன்மைச் செயலாளர் ராஜேஷ் குல்லர், அரசுப் பணிகளில் முதன்மைப்  பணியிடங் கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படுகிறது. கடந்த சில மாதங்க ளாக அரசு “வேலை வழங்குவதில்” கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

தேர்தல் விதியைக் காட்டி நழுவிய குல்லர்

“குரூப் சி மற்றும் டி  பிரிவுகளில்  சுமார் 30,000 பேர் அரசு வேலைகளில் இந்தாண்டு  நியமிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 5- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் இவற்றில் சில நியமனங்கள் தாமதமாகியுள்ளன என்றார்.

கேட்டது அரசுப் பணி வழங்கியதோ ஒப்பந்ததாரர் பயிற்சி 

முதல்வர் மனோகர் லால்  கட்டார் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வறு மைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களுக்கு “மிஷன் 60,000” என்று அறிவித்தார். 

அவர்களை“வான் மித்ராஸ்”, “ஈசேவா மித்ராஸ்” மற்றும் “கிசான் மித்ராஸ்”  மூலம் 10,000 இளைஞர்க ளுக்கு (ஒப்பந்ததாரர்கள்) பயிற்சிய ளிக்கப்பட்டுள்ளது.

சோனிபட் மாவட்டம் கார்கோடா வில் உள்ள  தொழில் நகரில் மாருதி சுசுகி மற்றும் சுசுகி மோட்டார்சைக்கிள் உற் பத்தி ஆலைகள் அடுத்தாண்டு  தொ டங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 15,000 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தரவுகள் ஒரு ஏமாற்று வித்தை

வேலை வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளதாக  தரவுகள் மூலம் நிரூ பிக்க மாநில அரசு முயற்சிக்கிறது. ஆனால், “தரவுகள் ஒரு ஏமாற்று வித்தை” என்கிறார்  ஜெய் ஹிந்த் சேனா தலைவர் நவீன் ஜெய்ஹிந்த். மேலும் அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுக ளாக அரசு காலிப்பணியிடங்கள் போது மான அளவிற்கு நிரப்பப்படவில்லை என்றார்.

விவசாய மாநிலமான ஹரியானா வில் வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் வேலையற்றோரைத் திரட்டி தாம் பேரணி நடத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

வேலையில்லாத் திண்டாட்டத் தால் கிராமப்புற இளைஞர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபடுகின்றனர் என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் மாநில முன்னாள் தலைவர்.

இஸ்ரேலில் கூலி வேலை

புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதில் ஹரியானா அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா, அரசுத் துறைகளில் காலியாக உள்ள இரண்டு லட்சத்துக்கும் மேற் பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. ஆனால், உயர் பொறுப்புக ளுக்கு மட்டும் அதிகாரிகள் நியமிக்கப் படுகின்றனர். மாநிலத்தில் வேலை  கொடுக்க முடியாமல் முதல்வர் கட்டார், இஸ்ரேலில் கட்டுமானத் துறை யில்  பணியாற்ற 10,000 பேரை அனுப்பி யுள்ளார் என்றார்.

ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பயண முகவர் ஒருவர் கூறுகையில்,  கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பணிகளில் போதிய நியமனங்கள் இல்லை. இதனால்  இளைஞர்கள் வெளிநாடு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் மெஹாம், ஷங்கர் தயாள் ஷர்மா (30). இவர்கள் முடநீக்கியல் படிப்பில் (பிசியோதெரபி) முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது இவர்களில் ஷர்மா மாதம் ரூ. 9 ஆயிரம் சம்பளத்திற்கு ஒரு சிறிய மருத்துவமனையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார். அவர் கூறுகை யில், ஒவ்வொரு மருத்துவமனை மற்றும் சுகாதார மையத்திற்கும் ஒரு  பிசியோதெரபிஸ்ட் தேவை. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு  எட்டு காலி யிடங்களுக்கு மட்டுமே அரசால் விளம்பரம் செய்யப்பட்டது. 

அரசுப் பணிக்காக காத்திருந்து சோர்வடைந்துவிட்டேன். வாய்ப்புக் கிடைத்தால் “குரூப் டி” அரசு வேலை கிடைத்தால் கூட செல்லத் தயாராக உள்ளேன் என்றார். 

மேலும் தங்களது உறவினர்கள் இருவர் முனைவர் பட்டம் பெற்று தனி யார் பள்ளிகளில் பணியாற்றி வரு கின்றனர். அவர்களின் தகுதிக்கேற்ப அரசு  வேலை வழங்காததால் அவர்கள் “குரூப் டி”  வேலைகளில் பணியாற்றத் தயாராக உள்ளனர் என்றார். 

 இந்து இணையதள 
தகவல்களிலிருந்து...