அரியானாவில் ராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் சோனிபட் பல்கலையில் குஜராத் வதோராவை சேர்ந்த சன்ஸ்கர் சதுர்வேதி என்ற மாணவர் வணிக நிர்வாகவியல் பயின்று வந்தார். இந்நிலையில் மாணவர் சதுர்வேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மாணவரின் பெற்றோர், ‘கல்லூரியில் படித்த சக மாணவர்களின் ‘ராகிங்’ கொடுமையால் சன்ஸ்கர் சதுர்வேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் ராகிங் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தார். எனவே, சன்ஸ்கர் மரணத்தின் பின்னணி விசாரிக்கப்பட வேண்டும்’ குற்றம் சாட்டி உள்ளனர்.