ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 22.70% வாக்குகள் பதிவுள்ளன.
ஹரியாணா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனா். மொத்தம் 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி ஹரியாணாவில் மொத்தம் 22.70% வாக்குகள் பதிவுள்ளன.
பல்வாலில் 27.94% வாக்குகளும், ஜிந்தில் 27.20% வாக்குகளும், அம்பாலாவில் 25.50% வாக்குகளும், ஃபரிதாபாத்தில் 20.39% வாக்குகளும், குர்கானில் 17.05% வாக்குகளும், ஹிசாரில் 24.69% வாக்குகளும், ஜஜ்ஜாரில் 23.48% வாக்குகளும் பதிவாகியுள்ளன.