குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் - புஜ் நகரங்கள் இடையே 360 கி.மீ இடைவெளியில் அதிநவீன சொகுசு ரயிலான “வந்தே மெட்ரோ” ரயில் சேவையை பிரதமர் மோடி திங் களன்று மாலை கொ டியசைத்து துவங்கி வைத்தார். இந்த ரயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட இந்த “வந்தே மெட்ரோ” ரயிலுக்கு கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் செய் யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. துவக்கவிழாவுக்கு முன்பு வரை “வந்தே மெட்ரோ” ரயில் சேவை என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. ரயில் சேவையை துவங்கி வைக்கும் சில மணி நேரத்திற்கு முன்பு (திங்களன்று காலை) “நமோ பாரத் ரேபிட் ரயில்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. “நமோ (NAMO)” என்றால் நரேந்திர மோடி (NA MO - Narendra Modi) என்ற நிலையில், “நரேந்திர மோடி பாரத் ரேபிட் ரயில்” என தான் துவங்கி வைத்த ரயிலுக்கு தன் பெயரையே மோடி சூட்டிக்கொண்டுள் ளார்.