“தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்குவது உண்மை தான்”
தேர்தல் ஆணையம் வாக்காளர் களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வாக்கா ளர் பட்டியலில் பெயர்கள் உள்ள வர்களே, பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்க போதுமானவர்கள். எத்தனை பெயர்களை அவர்கள் நீக்குவார்கள்? பீகார் மக்கள் வேலைவாய்ப்பு வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். வெற்றுப் பேச்சுகளை அல்ல. பீகாரில் யாரும் பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாறப் போவதில்லை. வாக்காளர் பட்டி யலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தை எதிர்த்துப் போராடு வார்கள். தேர்தல் ஆணையம் எஜமானர் அல்ல, மக்களே எஜமானர்கள். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்” என அவர் கூறினார்.